திருச்சி மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 308 ஆக உயர்ந்தது; புதிதாக 940 பேருக்கு தொற்று
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 308 ஆக உயர்ந்தது. புதிதாக நேற்று 940 பேருக்கு தொற்று உறுதியானது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 308 ஆக உயர்ந்தது. புதிதாக நேற்று 940 பேருக்கு தொற்று உறுதியானது.
புதிதாக 940 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 940 பேருக்கு தொற்று உறுதியானது.
இதில் துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவரும், முசிறி பகுதியில் 30 பேரும், காட்டுப்புத்தூர் பகுதியில் 21 பேரும், உப்பிலியபுரம் பகுதியில் 33 பேரும் அடங்குவர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 32,932 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 10 பேர் பலி
தொடர் சிகிச்சையில் 5,797 பேர் உள்ளனர். 587 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 26,827 ஆகும்.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற ஆண்கள், பெண்கள் நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்தது.
423 படுக்கைகள் காலி
திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் 31 படுக்கைகள், சாதாரண படுக்கைகள்-228 மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் படுக்கைகள் 164 என மொத்தம் 423 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகளில் எத்தனை காலி படுக்கைகள் உள்ளன என்ற விவரம் வருமாறு:-
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முகாமில் சாதாரண படுக்கை காலி-140, சிட்டி மெடிக்கல் செண்டர் ஆஸ்பத்திரி-4, இந்திரா சேஷாத்ரி நர்சிங் ஹோம் சாதாரண படுக்கை-14,ஆக்ஸிஜன் படுக்கை-13, ஜெகதா ஆஸ்பிட்டல் சாதாரண படுக்கை-4, ஆக்ஸிஜன் படுக்கை-7, கணபதி மெமோரியல் ஹோம் சாதரண படுக்கை-4, ஆக்ஸிஜன் படுக்கை-10.
கதிர் ஆஸ்பத்திரி ஆக்ஸிஜன் படுக்கை-1, முசிறி எல்.ஜி.நர்சிங் ஹோம் சாதாரண படுக்கை-3, ஆக்ஸிஜன் படுக்கை-8, தீவிர சிகிச்சை பிரிவு-3, நாகமங்கலம் ஹர்ஷமித்ரா ஆஸ்பத்திரி நார்மல் படுக்கை-4, திருச்சி பாத்திமா மெட்ரினிட்டி ஹோம் சாதாரண படுக்கை-4, தீவிர சிகிச்சை பிரிவு-1.
மேற்கண்ட காலி படுக்கைகள் விவரம் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி உள்ளது. நோயாளிகள் வருகைக்கு ஏற்ப காலி எண்ணிக்கை குறையலாம். சிகிச்சை பெற்று வீடு திரும்புவோரின் எண்ணிக்கையை பொறுத்து காலி படுக்கைகள் அதிகரிக்கவும் செய்யலாம் என அரசு இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.