கங்கை கொண்டான் அருகே கல்வெட்டான் குழியில் மூழ்கி வாலிபர் சாவு

கங்கை கொண்டான் அருகே கல்வெட்டான் குழியில் மூழ்கி வாலிபர் இறந்தார்.

Update: 2021-05-13 19:01 GMT
நெல்லை:

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள துறையூரை சேர்ந்தவர் அருள்ராஜ் மகன் அஜித் (வயது 24). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள கல்வெட்டான் குழியில் மீன்பிடிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அஜித் தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கினார்.

இதுகுறித்து தகவலறிந்த கங்கைகொண்டான் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அஜித்தை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அஜித் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்