அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் முதல் அலையை காட்டிலும் 2-வது அலை தீவிரமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 600 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 4,302 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் அவர்களுக்கான படுக்கையின் தேவையும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கொரோனா பாதித்தவர்களுக்கும், மூச்சுத்திணறல், சுவாசப்பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்படும் நிலையில் கூடுதலாக படுக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதன்படி அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள 550 ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிய நிலையில், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு எதிரில் சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் இணைப்பு கொண்ட தற்காலிக படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிவடைந்த உடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.