கொரோனா ஊரடங்கை மீறி திறந்திருந்த 12 கடைகளுக்கு ‘சீல்’
கொரோனா ஊரடங்கை மீறி திறந்திருந்த 12 கடைகளுக்கு ‘சீல்’
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஊரடங்கை மீறி திருப்பத்தூரில் ெரயில்வே ஸ்டேஷன் ரோடு, திருவண்ணாமலை ரோடு, ஆலங்காயம் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகளை திறந்து, சமூக இடைவெளியின்றி, முககவசம் அணியாமல் கூட்டம் சேர்த்த டீக்கடைகள், மெக்கானிக் கடை, துரித உணவகம், இரண்டு சக்கர உதிரிபாகம் கடைகள் என 12 கடைகளுக்கு தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதேபோன்று கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் தலைமையில் கந்திலி கிராமத்தில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.