வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் உழவர் சந்தைக்கு பின்புறம் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் மூலம் கே.சி.ஆர் தெரு, முல்லை நகர், கரூர் சாலை வள்ளுவர்நகர் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் செல்லுகிறது. தற்போது இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு எல்லாம் உதிர்ந்து வெறும் கம்பிகள் தான் வெளியே தெரிகிறது. மேலும் மின்கம்பத்தில் செல்லும் மின்வயர்கள் தாழ்வாக செல்கிறது. மேலும் மின்கம்பத்தின் நடுவே சிறிய செடிகளும் வளர்ந்து உள்ளது. இதனால் எப்ப வேண்டுமானால் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாகசெல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.