கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம் ஆனார்

Update: 2021-05-13 17:51 GMT
கரூர்
கரூர் ஆண்டாங்கோவில் ஜீவா நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் சுருதி (வயது18). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.ஏ. படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து வந்த சுருதி திடீரென மாயமானார். இதையடுத்து சுருதியின் பெற்றோர் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து சுருதியை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்