சாயர்புரம் பஜாரில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
சாயர்புரம் பஜாரில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் மெயின் பஜாரில் ஏரல் சமூக பாதுகாப்பு, திட்ட தாசில்தார் எலிசபெத்மேரி தலைமையில,் பெருங்குளம் வருவாய் ஆய்வாளர் சக்கரவர்த்தி, சாயர்புரம் கிராம நிர்வாக அதிகாரி மஞ்சுளா மற்றும் சாயர்புரம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முககவசம் அணியாமல் வெளியே நடமாடக்கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.