பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
மேலூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
மேலூர்,மே.
மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மேலப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கச்சாமி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 40). இவர்கள் இரவில் காற்றோட்டமாக இருக்க கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியுள்ளனர். நள்ளிரவு 2 மணியளவில் வீடு புகுந்த மர்ம ஆசாமி புவனேஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துள்ளார். பின்னர் அதேபோன்று அடுத்த வீட்டிலும் கைவரிசை காட்டியுள்ளான். அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளனர். அப்போது புவனேஸ்வரியும், அவரது குடும்பத்தினரும் விழித்து எழுந்து திருடனை பிடிக்க ஓடியுள்ளனர். அதன் பின்னரே புவனேஸ்வரி, தான் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேலப்பட்டி கிராம மக்களிடையை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.