இந்து அறநிலையத்துறை சார்பில் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், ஆஸ்பத்திரிகளில் அதிக அளவில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் உத்தரவின் பேரில், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு இந்து அறநிலையத்துறை மூலம் உணவு பொட்டலங்கள் வழங்க உத்தரவிட்டார்.அதன்படி இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் உள்ள இந்து சமய நிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் சார்பில் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க அறிவிறுத்தினார்.
இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் ஸ்ரீபவானி அம்மன் கோவிலில் இருந்து காய்கறி சாதம் 200 பொட்டலங்கள், சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணியர் கோவிலில் இருந்து 100 தக்காளிசாதம் உணவு பொட்டலங்கள் பொன்னேரி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.