கலெக்டரிடம் கொரோனா நிதியாக வழங்கிய 3-ம் வகுப்பு மாணவி
3-ம் வகுப்பு மாணவி கலெக்டரிடம் கொரோனா நிதியாக உண்டியல் பணத்தை வழங்கினார்.
ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் சு.சண்முகவேல். இவருடைய மனைவி காட்டுராணி. இவர்களுக்கு எஸ்.தன்ஷிகா என்ற 8 வயது மகள் உள்ளார். இவர் ஈரோடு கலைமகள் பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போதைய கொரோனா பரவலில் பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில் இவர் தனது ஒரு ஆண்டு சேமிப்பினை கொரோனா நிவாரண நிதியாக வழங்க ஆசைப்படுவதாக பெற்றோரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் ஒரு ஆண்டாக தான் சேமித்து வந்த உண்டியலை அப்படியே எடுத்துக்கொண்டு நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவனை சந்தித்து வழங்கினார். சிறுமியின் தொண்டு உள்ளத்தை கலெக்டர் சி.கதிரவன் பாராட்டினார்.