பெரம்பலூரில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
பெரம்பலூரில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 143 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 25 பேரும், வேப்பூர், ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் தலா 19 பேரும் என மொத்தம் 206 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மாவட்டத்தில் இதுவரை இல்லாத பாதிப்பாகும். இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,895 ஆக உயர்ந்துள்ளது. இதில், 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் கொரோனாவுக்கு பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,005 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.