மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி
வடக்கலூரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மின்சாரம் பாய்ந்து பலியானாள்.
மங்களமேடு
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள வடக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் யாழினி (வயது 6). இவள் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். வெங்கடேசனின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அருணாசலம். இவர் வீடு கட்டும் பொருட்டு தனது வீட்டின் முன்பு தண்ணீருக்காக போர் அமைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று காலை 8 மணியளவில் யாழினி அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது போர் அமைக்கப்பட்டிருந்த மின்சார வயரில் யாழினி தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் சிறுமி தூக்கி வீசப்பட்டாள். உடனே அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யாழினி இறந்தாள். இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.