குடும்ப பிரச்சினையில் பெண் தீக்குளித்து தற்கொலை
குடும்ப பிரச்சினையில் பெண் தீக்குளித்து தற்கொலை
பெங்களூரு:
துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா ஜடகொண்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி நந்தினி. குமாரசாமிக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் அவர், குடிபோதையில் மனைவி நந்தினியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல், நேற்று முன்தினமும் குமாரசாமிக்கும், நந்தினிக்கும் இடையே குடும்ப பிரச்சினையில் தகராறு ஏற்பட்டது. உடனே குமாரசாமி வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்று விட்டார். இந்த நிலையில், வீட்டில் இருந்த நந்தினி மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீவைத்து கொண்டார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து நந்தினி உடலில் எரிந்த தீயை அணைத்தனர். உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு நந்தினி மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து மதுகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.