ஆம்பூரில் அரசு விதிகளை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு ‘சீல்’

ஆம்பூரில் அரசு விதிகளை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு ‘சீல்’

Update: 2021-05-12 17:44 GMT
ஆம்பூர்

ஆம்பூர் நகர பகுதிகளில் முழு ஊரடங்கையொட்டி அரசு விதிமுறைகளை மீறி இயங்கி வந்த செருப்பு கடை மற்றும் சலூன் கடை உள்பட 4 கடைகளுக்கு தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலான வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று பரவும் வகையில் கூட்டம் சேர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த் துறையினர் அந்த மருத்துவமனையின் மீது ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்