பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு கொரோனா

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-05-12 16:37 GMT
பரமக்குடி, 
பரமக்குடியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனை, அரசு கலைக்கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் ஏராளமானோர் அவர்களது வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இந்தநிலையில் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கும், உதவி செயற் பொறியாளர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யபட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆகையால் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டு உள்ளது. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்