ஊரடங்கை மீறி செயல்பட்ட வெல்டிங் பட்டறைக்கு சீல்
ஊரடங்கை மீறி செயல்பட்ட வெல்டிங் பட்டறைக்கு சீல்
ரிஷிவந்தியம்
சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் ரிஷிவந்தியம் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அத்தியூர் கிராமத்தில் ஊரடங்கை மீறி பழனிவேல் என்பவரின் வெல்டிங் பட்டறை திறந்து இருந்ததை பார்த்த அதிகாரிகள் வெல்டிங் பட்டறையை பூட்டி சீல் வைத்தனர். அப்போது அரியலூர் வருவாய் ஆய்வாளர் இளையராஜா, அத்தியூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.