கல்வராயன்மலையில் வெறிச்சோடி கிடக்கும் படகு குழாம்

கல்வராயன்மலையில் வெறிச்சோடி கிடக்கும் படகு குழாம்

Update: 2021-05-12 16:20 GMT

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. ஏழைகளின் சுற்றுலாத்தலமாக விளங்கும் இங்கு கவியம், பெரியார், மேகம் என 5-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. மேலும் படகு சவாரி செய்வதற்காக கரியாலூர்-வெள்ளிமலை செல்லும் சாலையில் படகு குழாமும் உள்ளது. சுற்றுலா வரும் பயணிகள் இந்த படகு குழாமில் படகு சவாரி செய்து மகிழ்வது உண்டு. 

இந்த நிலையில் கோடை வறட்சியின் காரணமாக கல்வராயன் மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகள் வறண்டு காணப்படுகிறது. ஆனால் படகு குழாமில் தண்ணீர் இருப்பதால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வந்தனர். இதனால் நீர் வீழ்ச்சிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகளுக்கு இது ஆறுதலாக இருந்தது. 

ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கல்வராயன் மலையில் உள்ள படகு குழாமும் மூடப்பட்டது. படகுகள் அனைத்தும் கரையோரமாக ஓய்வெடுத்து கொண்டிருப்பதை காணமுடிகிறது. இதனால் படகு குழாம் வெறிச்சோடி காணப்படுகிறது. 

மேலும் செய்திகள்