செவிலியர்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள் நீலகிரி கலெக்டர் கேக் வெட்டி வாழ்த்தினார்

செவிலியர்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள் நீலகிரி கலெக்டர் கேக் வெட்டி வாழ்த்தினார்

Update: 2021-05-12 14:56 GMT
ஊட்டி
ஆண்டுதோறும் மே 12-ந் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா செவிலியர்களுடன் இணைந்து கேக் வெட்டி, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசும்போது, கொரோனா காலகட்டத்தில் உயிரையும் துச்சமென மதித்து கள பணியாற்றி வரும் செவிலியர்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள். தங்களுக்கு தொற்று ஏற்பட்ட போதும், குணம் அடைந்த பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பி சேவைபுரிந்து வருகின்றனர்.

 அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது என்றார். 

நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி டீன் மனோகரி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பழனிச்சாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

கூடலூர் தாலுகா தலைமை ஆஸ்பத்திரியில் நடந்த விழாவுக்கு தலைமை டாக்டர் புகழேந்தி தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ. ராஜகுமார், தாசில்தார் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நர்சுகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் வருவாய் துறையினர் கொண்டு வந்த கேக்கை நர்சுகள் வெட்டினர்.


மேலும் செய்திகள்