உடன்குடி பகுதியில் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு

உடன்குடி பகுதியில் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2021-05-12 13:33 GMT
உடன்குடி:
கொரோனா 2-வது அலையை முறியடிக்கும் வகையில் மாநில அரசு தமிழ்நாடு முழுவதும் பொது முடக்கத்தை அறிவித்துள்ளது. இக்காலத்தில் குலசேகரன்பட்டினம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் கூட்டமாக எங்கேனும் நிற்கிறார்களா?சமூக விரோத செயல்கள் ஏதும் நடைபெறுகிறதா? என்பதை டிரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியை திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், உடன்குடி பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்கினார். இதில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சிறப்பு போலீஸ் 
இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்இன்ஸ்பெக்டர் திருமலைமுருகன், தனிப்பிரிவு காவலர் தாமஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்