பழனி உழவர்சந்தையில் ஆர்.டி.ஓ. ஆய்வு

பழனி உழவர்சந்தையில் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா என்று ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தார்.

Update: 2021-05-12 12:21 GMT
பழனி: 

பழனி உழவர்சந்தையில் காய்கறிகளை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 

அவ்வாறு வரும் மக்களை சமூக இடைவெளியை பின்பற்றும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் பழனி ஆர்.டி.ஓ. ஆனந்தி தலைமையில் அதிகாரிகள் நேற்று உழவர்சந்தையில் திடீர் ஆய்வு செய்தனர்.
 
அப்போது முககவசம் அணிதல், சமூக இடைவெளி, பொதுமக்கள், விவசாயிகள் பின்பற்றுகிறார்களா? என்று பார்வையிட்டார். 

கொரோனா விதிமுறைகளை பின்பற்றும்படி ஆர்.டி.ஓ. அறிவுறுத்தினார். 

இந்த ஆய்வின்போது சுகாதார பணியாளர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவச உடை அணிந்து வந்திருந்தனர். 

முன்னதாக அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் மகேந்திரன் தலைமையில் ஊழியர்கள் கபசுரக் குடிநீரை வினியோகம் செய்தனர். 

மேலும் செய்திகள்