ஆரணி நகராட்சி ஆணையாளருக்கு கொரோனா

ஆரணி நகராட்சி ஆணையாளருக்கு கொரோனா

Update: 2021-05-12 11:47 GMT
ஆரணி

ஆரணி நகராட்சி ஆணையாளராக (பொறுப்பு) இருந்து வருபவர் டி.ராஜவிஜயகாமராஜ். நகராட்சி வரைபடவாளர் பாலாஜி இருவருக்கும் கொரோனா பரிசோதனை ெசய்யப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருவரும், ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். 
இதையொட்டி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஆரணி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், ஆரணி நகராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் இன்று (வியாழக்கிழமை) கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்