நெல்லையில் குடோனில் பதுக்கிய 1,200 மதுபாட்டில்கள் பறிமுதல்

நெல்லையில் குடோனில் பதுக்கிய 1,200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-05-11 22:07 GMT
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் மதுக்கடை அருகே உள்ள ஒரு குடோனில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் போலீசார் நேற்று மாலை அந்த குடோனுக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு குவாட்டர் அளவுடைய 1,200 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால், மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் பாளையங்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம் (வயது 53) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்