திருச்சி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 70 ஆக அதிகரிப்பு; தடை செய்யப்பட்ட பகுதியாக தகரம் வைத்து அடைப்பு

திருச்சி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 70 ஆக அதிகரித்துள்ளது. அவை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தகரம் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.

Update: 2021-05-11 21:17 GMT

திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள். அதே வேளையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர், தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு, டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதன் காரணமாக கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. திருச்சி மாநகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 25 ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை தற்போது 37 ஆக அதிகரித்துள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக சீனிவாசாநகர் முதல் குறுக்குத்தெரு, கொட்டப்பட்டு காளியம்மன் கோவில் வீதி, குமரன்நகர் கவுசல்யா அபார்ட்மெண்ட், ராம்ஜிநகர் மாரியம்மன் கோவில் தெரு, கிராப்பட்டி டி.எஸ்.ஏ.நகர், அருணாச்சல நகர் உள்ளிட்டவை அடங்கும். 
இதுபோல நகராட்சி பகுதிகளில் 10, கிராமப்புற பகுதிகளில் 23 என அதிகரித்துள்ளது. ஆக இதுவரை கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 70 ஆக அதிகரித்துள்ளது. அப்பகுதிகளில் தகரம் அடித்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்