கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகினர்

Update: 2021-05-11 19:29 GMT
கரூர்
 தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அதேபோல கரூர் மாவட்டத்திலும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தினமும் மதியம் 12 மணிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனாவின் வீரியம் குறைந்த பாடில்லை. இந்தநிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி மாவட்டத்தில் புதிதாக 166 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 242 பேர் குணமடைந்ததால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி 1,459 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்