மே 11: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழகத்தில் இன்று 29 ஆயிரத்து 272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 29 ஆயிரத்து 272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 38 ஆயிரத்து 509 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 182 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 60 ஆயிரத்து 150 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 298 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 178 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு இன்றைய விவரம்:-
அரியலூர் - 106
செங்கல்பட்டு - 2,419
சென்னை - 7,466
கோவை - 2,650
கடலூர் - 434
தர்மபுரி - 193
திண்டுக்கல் - 291
ஈரோடு - 925
கள்ளக்குறிச்சி - 431
காஞ்சிபுரம் - 664
கன்னியாகுமரி - 995
கரூர் - 166
கிருஷ்ணகிரி - 478
மதுரை - 1,024
நாகை - 454
நாமக்கல் - 372
நீலகிரி - 170
பெரம்பலூர் - 168
புதுக்கோட்டை - 176
ராமநாதபுரம் - 222
ராணிப்பேட்டை - 423
சேலம் - 475
சிவகங்கை - 219
தென்காசி - 232
தஞ்சாவூர் - 452
தேனி - 417
திருப்பத்தூர் - 644
திருவள்ளூர் - 1,204
திருவண்ணாமலை - 732
திருவாரூர் - 270
தூத்துக்குடி - 628
திருநெல்வேலி - 768
திருப்பூர் - 584
திருச்சி - 879
வேலூர் - 675
விழுப்புரம் - 422
விருதுநகர் - 444
மொத்தம் - 29,272