பெரியகுளத்தில் தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு

பெரியகுளத்தில் தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2021-05-11 16:33 GMT
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 90). இவர், பெரியகுளத்தில் உள்ள மயானத்தில் சடலங்களை எரிப்பது, புதைப்பது ஆகிய பணிகளை செய்து வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால் காளிதாஸ் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அவர் திடீரென்று உயிரிழந்தார். 
இதுகுறித்த தகவல், பெரியகுளம் தென்கரை பகுதியில் வசித்து வந்த காளிதாசின் மகன் முருகேசனுக்கு (51) தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன முருகேசனும், அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்தார். 
இதையடுத்து இறந்துபோன தந்தை, மகனின் உடல்கள் பெரியகுளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்