கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 478 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 478 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

Update: 2021-05-11 16:27 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில 478 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. 110 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 734 ஆக உள்ளது. இதில் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 225 ஆக உள்ளது. தற்போது 3 ஆயிரத்து 358 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 151 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்