கோத்தகிரி கருமாரியம்மன் கோவிலில் அமாவாசை பூஜை
கருமாரியம்மன் கோவிலில் அமாவாசை பூஜை
கோத்தகிரி
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாலும், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு உள்ளதாலும், இந்த பூஜையில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
பூசாரி மட்டும் கோவிலை திறந்து பூஜைகள் செய்த பின்னர் மீண்டும் கோவில் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.