ஆம்பூர் வர்த்தக மையத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
ஆம்பூர் வர்த்தக மையத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த மாதனூர், சோலூர், உமராபாத் ஆகிய பகுதிகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் ஆம்பூர் கன்னிகாபுரத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது உதவி கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, தாசில்தார் ஆனந்தகருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.