ஊத்துக்கோட்டையில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
தமிழக அரசு பிறப்பித்த 14 நாள் முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதையடுத்து ஊத்துக்கோட்டையில் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, மளிகை, பால் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டன.அதன் பிறகு அந்த கடைகளும் மூடப்பட்டன. முழு ஊரடங்கின் போது ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி அண்ணாசிலை நான்கு சாலை சந்திப்பு உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி கோவிந்தராஜ், சிட்டிபாபு ஆகியோரின் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முககவசம் அணியாமல் தேவையின்றி ஊர் சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.