தென்காசியில் கொரோனாவுக்கு 3 பெண்கள் பலி

தென்காசியில் கொரோனாவுக்கு 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-05-10 21:23 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 55, 67 மற்றும் 76 வயதுடைய 3 பெண்கள் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்கள். இதன்மூலம் மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 314 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 161 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 366 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1,586 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்