மேலும் 638 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 638 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-05-10 21:03 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 638 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. 
உயர்வு 
மாவட்டத்தில் மேலும் 638 பேருக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.  20,535 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
 2,019 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.
பாதிப்பு 
 இதுவரை இல்லாத அளவுக்கு 600-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் முத்துராமன் பட்டி, அல்லம்பட்டி, மின்வாரிய காலனி, சின்ன பள்ளிவாசல் தெரு, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, பெத்தனாட்சி நகர், முத்து தெரு, நக்கீரன்தெரு, கருப்பசாமிநகர், குந்தலப்பட்டி, பாரப்பட்டி தெரு, மேல ரத வீதி, புது ெரயில்வே காலனி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், வீரபத்திரன் தெரு, பெரிய பேராலி, மெட்டுக்குண்டு, பாண்டியன் நகர், மாரனேரி, பாரப்பட்டி, பூலாம்பட்டி, ஏ.புதுப்பட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணறு, அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர்,நரிக்குடி, எம்.ரெட்டியபட்டி, ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ெகாரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்