முதியவரின் கையை வெட்டிய வாலிபர் மீது வழக்குப்பதிவு

முதியவரின் கையை வெட்டிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-05-10 18:23 GMT
நச்சலூர், மே.11-
நச்சலூர் அருகே உள்ள குறிச்சிபகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 60). சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் இவரது தம்பி ரெங்கன் என்பவரது ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இதை பார்த்த பாண்டியன் அந்த ஆடுகளை விரட்டினார். இதைஅறிந்த ரெங்கனின் மகன் திவ்யாகரன் (25) பாண்டியனை தகாத வார்த்தையால் திட்டியதுடன் மீன் வெட்டும் கத்தியால் பாண்டியனின் கையை வெட்டினாராம். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள்  திவ்யாகரனை தடுக்க முயன்றனர். அப்போது அவர் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பாண்டியன் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திவ்யாகரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்