மாவட்டத்தில் மதுபாட்டில்கள், புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் மது பாட்டில்கள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-10 18:03 GMT
புதுக்கோட்டை
புகையிலை பொருட்கள்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி உட்கோட்டம் திருமயம் அருகே பி.அழகாபுரியில் மதுபாட்டில்கள் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் அழகாபுரி கிராமத்திற்கு நேற்று சென்றனர். அங்கு ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும் மதுபாட்டில்களும் இருந்தன. இதனை பதுக்கி வைத்திருந்த அன்பரசுவை (வயது30) போலீசார் கைது செயதனர். 
மேலும் அவரது வீட்டில் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து திருமயம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் மதுபாட்டில்கள் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தனிப்படையினருக்கு பாராட்டு
இதேபோல காரையூர் காவல் சரகம், வெள்ளையக்கவுண்டம்பட்டி கிராமத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பெட்டிக்கடையில் வைத்திருந்த சண்முகத்தை (43) போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.5,400 மதிப்பிலான புகையிலை பொருட்களை காரையூர் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.
காரையூர்
காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையில் போலீசார் கைவேலிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கைவேலிப்பட்டியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த சிதம்பரம் (வயது 38) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்