எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே எம்.ஜி.ஆர்.சிலை உடைக்கப்பட்டது
திருச்சி
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மரக்கடை பகுதியில் எம்.ஜி.ஆர். உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் அ.தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று காலை எம்.ஜி.ஆர்.சிலையின் வலது கை மணிக்கட்டு வரை உள்ள பகுதி உடைக்கப்பட்டு கிடந்தது. இந்த தகவல் அ.தி.மு.க.வினரிடையே வேகமாக பரவியது. இதையடுத்து ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காந்தி மார்க்கெட் போலீசாரும் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் அங்கு வந்து சிலை உடைக்கப்பட்டு கிடந்ததை பார்வையிட்டார். பின்னர் அவர் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.