தலைவாசலுக்கு கடத்தி வரப்பட்ட 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது
2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தலைவாசல்:
தலைவாசல் அருகே நத்தக்கரை பிரிவு ரோட்டில் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபால், ராமசாமி ஆகியோர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு ஆட்ேடாவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மொத்தம் தலா 50 கிலோ எடை உள்ள 45 மூட்டைகளில் மொத்தம் 2¼ டன் ரேஷன் அரிசி இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசியை கடத்தியவர்கள் கடலூர் மாவட்டம் வி.சித்தூரை சேர்ந்த சத்தியசீலன் (வயது 25), இஸ்மாயில் (30), சடையன் (50) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் தொழுதூரில் இருந்து தலைவாசல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.