நங்கவள்ளி அருகே மதுக்கடை பூட்டை உடைத்து திருட்டு
மதுக்கடை பூட்டை உடைத்து திருட்டு
மேச்சேரி:
நங்கவள்ளி அருகே பழங்கோட்டையில் மதுக்கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். நேற்று காலை கடைைய திறப்பதற்காக வந்தபோது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ரூ.17 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து நங்கவள்ளி போலீசில் கடையின் மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.