கொண்டலாம்பட்டி அருகே மதுபாட்டில்களை சுடுகாட்டில் பதுக்கல்
மதுபாட்டில்களை சுடுகாட்டில் பதுக்கல்
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சின்னபுத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 30). இவர் சிவதாபுரம் கிருஷ்ணப்பா தியேட்டர் அருகே உள்ள சுடுகாட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் மது விற்பனை நடைபெற்று வந்த இடத்திற்குச் சென்று தமிழரசனை மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து 88 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.