அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2021-05-09 21:11 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 
தொடர்மழை 
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அடிவாரப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 
இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மீன்வெட்டி பாறை அருவி, சரக்குப்பாறை அருவி, ராக்காச்சி கோவில் அருவி உள்பட பல்வேறு அருவிகளிலும், நீர்வீழ்ச்சிகள், நீர் ஓடைகளிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 
 வனவிலங்கு
இவ்வாறு அடிவார பகுதிகளில் ஏராளமாக தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மலை உச்சி பகுதிக்கு சென்று விட்டதாக மலைவாழ் மக்கள் கூறுகின்றனர். 
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:- 
செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக யானை, சிறுத்தை, கரடி, மான், பாம்பு, சாம்பல் நிற அணில்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 
மலை உச்சி 
தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி முழுவதும் தண்ணீர் ஏராளமாக உள்ளது. இதனால் அடிவார பகுதியில் வசித்து வந்த வனவிலங்குகள் அனைத்தும் மலை உச்சிக்கு சென்று விட்டன. 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்