டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள்

டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது

Update: 2021-05-09 20:51 GMT
பெரம்பலூர்:

கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படுகின்றன. இதனால் 14 நாட்கள் முற்றிலும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பதால், பெரம்பலூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலையில் கடைகள் திறந்ததில் இருந்தே மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்க அலைமோதினர். மாலையில் கடை மூடப்படும் வரை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் வியாபாரம் நடந்து கொண்டே இருந்தது. மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இதனால் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.

மேலும் செய்திகள்