தென்காசி மாவட்டத்தில் 2,473 மதுபாட்டில்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டத்தில் 2,473 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-05-09 20:09 GMT
தென்காசி, மே:
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் சிலர் அதிகமான மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதையடுத்து 10 மதுபாட்டில்களுக்கு அதிகமாக வாங்கி சென்றவர்களை கைது செய்யுமாறு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நேற்று தென்காசியில் அதிகமான அளவு மதுபாட்டில்களை வாங்கி சென்ற 10 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபான்று நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் அதிக மதுபாட்டில்களை வாங்கி சென்றதாக 11 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 2,473 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்