கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகக்கவசம் மாற்றி திருமணம் செய்த ஜோடி

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகக்கவசம் மாற்றி திருமணம் செய்த ஜோடி

Update: 2021-05-09 18:12 GMT
பெங்களூரு:

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருமண நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்ப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஜயாப்புரா மாவட்டம் நிடகுந்தியில் ஒரு ஜோடி முகக்கவசத்தை மாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 

நிடகுந்தி அருகே உள்ள ஒரு வாலிபருக்கும், இளம்பெண்ணுக்கும் 2 பேரின் பெற்றோரின் பேசி திருமணம் முடிவு செய்திருந்தார்கள். அதன்படி, வாலிபருக்கும், இளம்பெண்ணுக்கும் நிடகுந்தி டவுனில் உள்ள கல்யாண மண்டபத்தில் வைத்து நேற்று காலையில் திருமணம் நடைபெற்றது.

அப்போது மணமக்கள் மாலை மாற்றி திருமணம் செய்வதற்கு பதிலாக, முகக்கவசத்தை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். மணமகன் தன்னிடம் இருந்த முகக்கவசத்தை மணமகளுக்கு அணிவித்தாா். அதுபோல், மணமகள், மணமகனுக்கு முகக்கவசத்தை அணிவித்து இல்லற வாழ்க்கையில் இணைந்தனர். 

கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணியும்படி அரசு கூறி வருவதால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும், தங்களது திருமணம் ஊரடங்கு காலத்தில் நடப்பதால் முகக்கவசத்தை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக அந்த ஜோடி தெரிவித்துள்ளது. அவா்களது இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா.

மேலும் செய்திகள்