திண்டிவனம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவர் பலி

மாணவர் பலி

Update: 2021-05-09 16:33 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த அகூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் ஹரிஷ் (வயது 15). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஹரிஷ் நேற்று தனது நண்பர்கள் 2 பேருடன் அதேஊரில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார். பின்னர் அவர்கள் 3 பேரும் கிணற்றில் குளித்துவிட்டு மேல்பகுதிக்கு வந்து உடை மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ஹரிஷ் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டாா். 
இதில் தலையில் பலத்த காயமடைந்த ஹரிஷ் தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் இதுபற்றி வெள்ளிமேடுபேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஹரிஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்