வரத்து குறைவால்வாழைத்தார்கள் விலை உயர்வு
வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்வு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடக்கும்.
இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு என்பதால் வாழைத்தார் ஏலம் நடக்கவில்லை.
இதனிடையே இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில2 வாரம் முழு ஊரடங்குஎன்பதால் மக்கள் நலன் கருதிநேற்று முழு ஊரடங்கு இல்லை என தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் வாழைத்தார் ஏலம்நடந்தது.
ஏலத்திற்கு மொத்தம் 700 வாழைத்தார்கள் மட்டுமே கொண்டுவரப்பட்டு இருந்தது. இதில், பூவன் வாழைத்தார் ரூ.200 முதல் ரூ.600 -க்கும், செவ்வாழைரூ.300 முதல் ரூ.900-க்கும், கற்பூரவள்ளி ரூ.150 முதல் ரூ.550 -க்கும்,மோரீஸ் ரூ.150 முதல் ரூ.200 -க்கும் ஏலம் போனது. நேந்திரங்காய் கிலோ ரூ.42-க்கும், கதளிரூ.28-க்கும் ஏலம் போனது.