சாத்தான்குளத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

சாத்தான்குளத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

Update: 2021-05-09 12:19 GMT
சாத்தான்குளம்:
கொரோனா பரவை தடுக்க மே 10ஆம்தேதி முதல் 24 ஆம்தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் காலத்தில் மக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் தட்டார்மடம் பஜாரில் கூடிய மக்களிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள்  ஐயப்பன், முருகன் ஆகியோர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது, வீட்டிலிருந்து வெளியே வரும் போது பொதுமக்கள் முககவசம் அணிந்துதான் வரவேண்டும். சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், கொரோனா பரவுவதை தடுக்க அரசுக்கு உதவிட வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்