திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படம் திறப்பு

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படம் திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

Update: 2021-05-09 00:26 GMT
திருவள்ளூர், 

சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, நேற்று திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோரின் உருவப்படங்களை திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தார். அவருடன் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பூபதி, நகராட்சி ஆணையர் சந்தானம், நகர செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், நகராட்சி பொறியாளர் நாகராஜன், அமுதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்