என்.புதுப்பட்டியில் 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

என்.புதுப்பட்டியில் 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.

Update: 2021-05-09 00:04 GMT
மோகனூர்,

மோகனூர் அருகே என்.புதுப்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்கடர் பாலமுருகன் அறிவுறுத்தலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா தலைமையிலான போலீசார் என்.புதுப்பட்டி பகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். 

அதில் என்.புதுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 10 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் என்.புதுப்பட்டியை சேர்ந்த மளிகை கடைகாரர் புஷ்பராஜ் (வயது 32) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 இதேபோல் வளையப்பட்டி பகுதியில் சோதனை நடத்தியதில் குமரவேல் (40) என்பவரது டீக்கடையில் 10 குட்கா பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.
========

மேலும் செய்திகள்