கொடுங்கையூர் போலீஸ் நிலையத்துக்கு கத்தியுடன் வந்த தந்தை-மகன் கைது

கொடுங்கையூர் போலீஸ் நிலையத்துக்கு கத்தியுடன் வந்த தந்தை-மகன் கைது செய்தனர்.

Update: 2021-05-08 20:54 GMT
பெரம்பூர், 

சென்னை மாதவரம் பால்பண்ணையை அடுத்த பச்சையப்பன் தோட்டம் மெயின் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராபர்ட் (வயது 43). இவருடைய மகன் பிலிப் ராய்சீன் டேவிட் (20). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளிக்க வந்தனர்.

அப்போது பிலிப் ராய்சீன் டேவிட் தனது இடுப்பில் கத்தியை சொருகி வைத்திருந்தார். அதை மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மீதுள்ள பையில் வைத்துவிட்டு போலீஸ் நிலையம் உள்ளே சென்றார். இதை அங்கிருந்த போலீசார் பார்த்துவிட்டு இருவரையும் நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது தந்தை-மகன் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கொடுங்கையூர் பகுதியில் ஒருவர் இவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியது உள்ளது. அவரை மிரட்டி பணத்தை வசூலிக்க கத்தியுடன் வந்தனர். ஆனால் அந்த நபர் இல்லாததால் அவர் மீது போலீசிசில் புகார் அளிக்க வந்தது தெரிந்தது.

இதையடுத்து தந்தை-மகன் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்