மே தின கொடியேற்று விழா

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மே தின ெகாடியேற்று விழா நடைபெற்றது.

Update: 2021-05-01 19:19 GMT
விருதுநகர், 
மே தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சக்கணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நகர செயலாளர் காதர் முகைதீன் கட்சி கொடியேற்றி வைத்தார். இதனை தொடர்ந்து தொழிலாளர் மேம்பாடு குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில்  போக்குவரத்து தொழிற்சங்க பொது செயலாளர் பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழுஉறுப்பினர் பாலமுருகன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், விவசாய தொழிற்சங்க மாநிலக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மீனவர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம், அகில இந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகி சகாயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதேபோல தாயில்பட்டியில் சி.ஐ.டி.யூ. சார்பில் நடைபெற்ற மே தின விழாவில் பட்டாசு தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் மகாலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்தில் சி.ஐ.டி.யூ. சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆலங்குளத்தில் வெம்பக் கோட்டை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய செயலாளர் நடராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட செயலாளர் லிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்