தென்னை ஓலையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி

தென்னை ஓலையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்து வது எப்படி? என்பது குறித்து மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் சித்ராதேவி தெரிவித்து உள்ளார்.

Update: 2021-04-30 17:48 GMT
பொள்ளாச்சி

தென்னை ஓலையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்து வது எப்படி? என்பது குறித்து மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் சித்ராதேவி தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக  அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

வெள்ளை ஈக்கள் 

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, மற்றும் மதுக்கரை உள்பட அனைத்து வட்டாரங்களிலும் சேர்த்து 87,650 எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

தென்னையில் லோகோஸ் சுருள் என்ற வெள்ளை ஈக்கள் தாக்கம் அதிகமாக உள்ளது. ஓலையில் சுருள் வடிவில் 50 முதல் 65 முட்டைகளை இந்த வெள்ளை ஈக்கள் இடுகின்றன. 4ல் இருந்து 7 நாட்களில் இந்த முட்டைகளில் இருந்து குஞ்சு வெளியாகி 15 நாட்களில் வளர்ச்சி அடைந்த ஈக்களாக மாறி விடுகிறது. 

காற்று மூலம் பரவல் 

இவை காற்று காரணாக அடுத்த மரங்களுக்கும் பரவுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 2 விளக்கு பொறிகளை இரவு 7 மணி முதல் 11 மணி வரை வைக்க வேண்டும். மேலும் ஏக்கருக்கு 10 மஞ்சள் நிற மற்றும் பாலிதீன் தாளில் விளக்எண்ணெய் தடவி 5 அடி உயரத்தில் வைக்கலாம்.

வெள்ளை ஈக்கள் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களில் தண்ணீரை விசைத் தெளிப்பான் மூலமாக அதிக அழுத்தத்தில் வேகமாக பீய்ச்சி அடிப்பதால் வெள்ளை ஈக்களின் முட்டைகள், குஞ்சுகள் அழிக்கப்படுகிறது. 

கட்டுப்படுத்தலாம் 

மேலும் உயிரியல் முறை கட்டுப்பாடாக கிரைசோபெர்லா ஒட்டுண்ணி முட்டைகள் ஏக்கருக்கு 500 என்ற எண்ணிக்கையில் இலைகளின் அடியில் கட்டி விட்டால் கட்டுப்படுத்தலாம். மேலும் வெள்ளை ஈக்கள் அதிகமானால் இவற்றை அழிக்கும் நல்ல ஒட்டுண்ணிகளான காக்ஸினெல்லிட் பொறி வண்டு, என் கார்சியா ஒட்டுண்ணி தோன்றும். 

அந்த ஓலையின் ஒரு பகுதியினை வெட்டி பாதிப்பு இருக்கும் தண்டுகளின் ஓலையில் வைக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மில்லி வேப்எண்ணெய் அல்லது 2 மில்லி அசாடிராக்டின் மற்றும் 1 மில்லி ஒட்டும் திரவம் கலந்து ஓலையின் அடிப்புறத்தில் தெளித்து தென்னை வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்